Wednesday 6 July, 2011

கம்பனுக்கு ஒரு கேள்வி





















ராப்பகலாய் பாட்டெழுதி
ராசகவி ஆனவனே
தமிழென்னும் கடலுக்குள்
தரைவரைக்கும் போனவனே

சூத்திரம்போல பாட்டெழுதும்
சுகக்கவியே நான் உனக்கு
மனுஷப்பூ மாலையிட்டா
மரியாதை ஆகாது

இந்திர லோகத்து
இளசுளை தேவரெல்லாம்
மோகக் கிறுக்கெடுத்து
முந்நூறு முத்தமிட
முத்தமிடுங் கூத்துகளை
மூத்தநிலா பார்த்துவிட

இட்ட முத்தத்து
எச்சில் கரையழிக்க
வட்டில் அமுதெடுத்து
வாய்கழுவ வாய்கழுவ

வாய்கழுவும் அமுதமெல்லாம்
வாய்கால் வழியோடி
கற்பக மரங்களுக்கு
கால்கழுவக் கால் கழுவ

கால்கழுவும் சுகவெறியில்
கற்பக மரமபூக்க
அந்த பூவையெல்லாம்
அரும்போடு கிள்ளிவந்து
வானவில்லில் நார்கிழித்து
வகையாக மாலைகட்டி
சொல்லரசே நான் உனக்குச்
சூட்டிவிட வேணுமல்லோ

நான் உனக்கு
மனுஷப்பூ மாலையிட்டா
மரியாதை ஆகாது

சொல்லுக்குள் வாக்கியத்தை
சுருக்கிவச்ச கவிப்புலவா

உன்னை இதுவரைக்கும்
ஒருகேள்வி கேட்கலையா

தினம்வடிச்ச கண்ணீரால்
தீவுக்குள் கடல்வளர்த்து

அசோகவனத்திருந்து சீதை
அழுதாளே அவளை நீ
கண்ணால் பார்க்கலையே
கவிமட்டும் சொன்னாயே
அம்பிகா பதியிழந்து
அமரா வதியுனது
காதுக்குள் அழுதாளே

ஊமை வெயிலுக்கே
உருகிவிட்ட வெண்ணெய் நீ
அக்கினி மழையிலே
அடடாவோ உருகலையே

கடவுள் காதலைநீ
கதைகதையாய் பாடினையே
மனுஷக் காதலைநீ
மரியாதை செய்யலையே

இந்தக்கேள்வியை, ஓ
எங்குபோய் நான்கேட்க
பாடிவச்ச கவிஇல்லே
படிச்சவுக சொல்லுங்க

நன்றி
- வைரமுத்து

Monday 11 May, 2009

காதலித்து பார்! வைரமுத்து-

காதலித்து பார்! வைரமுத்து-

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !

***

தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!

***

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!

***

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!

***

கவிஞர்களின் கவிதைகள் (சுட்டது)

பறக்கத் தெரியும்
திசை தெரியாது
காதல் ஓர்இலவம் பஞ்சு.

கபிலன்
*******

என்னைத் தவிர
யாரிடமும் பேசாதே.
உன் இதழ்களில்
நனைந்துவருவதால்
வார்த்தைகளெல்லாம்
முத்தங்களாகிவிடுகின்றன.
பழநிபாரதி
*********

ஒரு பாதி கதவு நீ
மறு பாதி கதவு நான்
பார்த்துக்கொண்டே
பிரிந்திருக்கிறோம்
சேர்த்து வைக்ககாத்திருக்கிறோம்!

நா.முத்துக்குமார்
************

காதல் கவிதை
எழுதுகிறவர்கள்
கவிதை மட்டும்
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
அதை வாங்கிச் செல்லும்
பாக்கியசாலிகளே
காதலிக்கிறார்கள்!

நா.முத்துக்குமார்
***********

கொலுசு
உன் கால்களோடு
போய்விட்டது!
சத்தம் மட்டும்
என் காதுகளோடே
வருகிறது!

பா.விஜய்
********

எண்ணெய் அப்பிய
ரெட்டை ஜடையில் சிக்கிவழுக்குது
மல்லிகைப் பூவும் என்மனசும்.
கம்பெனி சைக்கிளில்
போகும் உனை
வாடகை சைக்கிளில்
தொடர்வேன்.
உன்னை சமீபிக்கையில்
அறுந்து போகும்
செயினும் என் தைரியமும்.
பேச முடிவதே
கொஞ்ச நேரம்தான்!
வெட்கத்தை வீட்டிலேயே
வைத்து விட்டு
வரக்கூடாதா?

பா.விஜய்
**********

ரோஸ் ஜஸ் சாப்பிட்டு
வாய் சிவக்க நிற்பாய்!
நிற மாற்ற விதி
என்பது
இயற்பியல் அல்ல
இதழியல்!

பா.விஜய்
**********

சின்ன வயசில்
நிறையசிலேட்டு குச்சிகளை
முழுங்குவேனாம்!
இருபது வயதுகளில்
இப்படியெல்லாம்
உன்னைப் பற்றிஎழுதத் தானோ?

பா.விஜய்
*********

இரவில் ஒளிவிடும்
உன் உடலைப்பார்க்கும்
வரைதெரியாது எனக்கு
மின்மினிகள்
மின்னுவது
காதலால்தான்என்பது.

பழநிபாரதி
********

யாரோ நம் பெயரைசுவரில்
கிறுக்கியிருந்ததைப்படிக்கும்
பொழுது அச்சமாக இருந்தது.
நேற்று அதன்மீது
காதல் திரைப்பட போஸ்டரை
ஒட்டியிருந்ததைப் பார்க்க
மகிழ்வாக இருந்தது.

கபிலன்
*********

உன் காலடியில்
ஊரும் எறும்பைதயவுசெய்து
நசுக்கிவிடாதே
அது இழுத்துவரும்
இரைநம் காதலின் பெயரெழுதிய
அரிசியாக இருக்கலாம்.

பழநிபாரதி
*******

நீ ஒரு முறைதான்
பார்த்துவிட்டுப் போனாய்என்
வீட்டு ஆளுயரக்கண்ணாடி
உன் நிழற்படமாகிவிட்டது.

பழநிபாரதி
**********

இரவும் இரவும் சந்திக்கும்
இரகசியமான இடம்
உன் கூந்தல்.
அதைவிட இரகசியமான இடம்
உன் இதயம்.
அதனால்தான் அங்கே என்னை நீ
என்ன செய்கிறாய் என்றேதெரியவில்லை.

பழநிபாரதி
*********

நீ பருவமகள்
உண்மைதான்.
குளித்து முடித்த உன்கூந்தலில்
நீர் சொட்டும் போது
மழைக்காலம்.
சீவும்போது
இலையுதிர்காலம்.
நீ பூச்சூடும்போது
வசந்தகாலம்.
அதை அள்ளி
நான் போர்த்திக்கொள்ளும்போது
குளிர்காலம்.

பழநிபாரதி
**********

ஆதாம் ஏவாள் கனவில்
ஆப்பிள் துரத்துகிறது
ஆப்பிள் கனவில் பாம்பு துரத்துகிறது
பாம்பின் கனவில்சைத்தான் துரத்துகிறது
அனைவரில் கனவிலும்தோன்றி
கடவுள் சொல்கிறார்
காதலித்து கெட்டுப் போங்கள்!

நா.முத்துக்குமார்
**********

உனக்கும் எனக்கும் பிடித்த பாடல்
தேநீர்க் கடையில்பாடிக் கொண்டிருக்கிறது
கடைசி பேருந்தையும்விட்டு
விட்டுகேட்டுக் கொண்டிருக்கிறது
காதல்!

நா.முத்துக்குமார்
*****

Tuesday 7 April, 2009

ஜோக்ஸ்

வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீவிங்கன்னு எதிர்பார்த்தேன்.நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.
*****
நோயாளி : டாக்டர்.. அந்த ரேசன் கடையில இரண்டு கிலோ சர்க்கரைக்குப் பதிலா அரை கிலோ கம்மியா குடுக்குறாங்க.டாக்டர் : அதை ஏன் எங்கிட்ட சொல்றிறீங்க?நோயாளி : நீங்கதானனே டாக்டர், சுகர் கம்ப்ளையண்ட் இருந்தா என்கிட்ட வாங்கன்னிங்க.
*****
தலைவர் : என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது…?தொண்டர் : ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை யாரோ தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..
*****
நிருபர் : தீபாவளிக்கு ரிலீசாகிற உங்க படம் பிச்சிக்கிட்டு போகும்ன்னு சொன்னினீங்களே.. படத்துக்கு என்ன பெயர்?தயாரிப்பாளர் : ராக்கெட்.
*****
நர்ஸ்1 : டாக்டருக்கு சொந்தம்ன்னு சொல்லிக்க யாருமே இல்லை.நர்ஸ்2 : ஏன்?நர்ஸ்1 : எல்லாருக்கும் அவர்தான்னே ஆபரேசஷன் செய்தார்.

Monday 6 April, 2009

சுஜாதா



அறிவியல் ஹைக்கூ
ஸ்ரீ ராம ஜெயம் எழுதிவிட்டு
தொடங்கினேன்
கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்
**********
விண்வெளிக்கு சென்று திரும்பினால்
வயசாகிவிட்டது
காதலிக்கு .......
***********
அகழ்வாராய்ச்சி தோண்டலில்
அகப்பட்டது
கோகோ கோலா பாட்டில்
***********
சுஜாதா (ஏன் எதற்கு எப்படி லிருந்து சுட்டது)

Sunday 22 March, 2009

சென்ரியு கவிதைகள்

நாற்காலி ஆசை
யாரைத்தான் விட்டது...
நாற்காலியில் பொம்மைகள்

கர்த்தர்
நம்மைக் காப்பாற்றுவார்...
சிலுவையில் கர்த்தர்

எப்பொழுதும் அலங்காரத்துடன்
வாழ்கிறார்கள் திருநங்கைகள்...
சாயம் போன வாழ்க்கை

ஆசிரியரின் பாடத்தில் அசோகன்
மாணவனின் மனதில்...
மரம் வெட்டும் தந்தை

தமிழ் நாட்டில்
சாதிக்கவும் தடை
சாதி

நன்றி
- மாமதயானை (நிலாச்சாரல்)